உசிலம்பட்டியில் நடைபயணமாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு


உசிலம்பட்டியில் நடைபயணமாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 28 March 2019 4:30 AM IST (Updated: 28 March 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டியில் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உசிலம்பட்டி,

தேனி தொகுதியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதுரை வரும் வழியில் உசிலம்பட்டிக்கு நேற்று இரவு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வாக்காளர்களை சந்தித்தார்.

அப்போது தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் மு.க.ஸ்டாலினுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Next Story