2½ வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
2½ வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டியை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது 2½ வயது பெண் குழந்தையை ஒரு கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அந்த குழந்தை மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தது.
இதனைப்பார்த்த ரெட்டிப்பாளையம் காமாட்சிபுரத்தை சேர்ந்த சத்தியராஜ்(25) என்பவர், குழந்தையிடம் உனக்கு மிட்டாய் வாங்கித்தருகிறேன் என கூறி அழைத்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தை அவருடன் சென்றுள்ளது. பின்னர் அவர் அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து அருகில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு பிணம் எரிக்கும் மேடையில் வைத்து அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது குழந்தை மயங்கியது. இதையடுத்து குழந்தையை அருகில் உள்ள ஒரு வீட்டில் சத்தியராஜ் கொண்டு வந்து விட்டுள்ளார். அப்போது உறவினர்கள் பார்த்து அவரை பிடித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தஞ்சை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததற்காக சத்தியராஜூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கடத்திய குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்£ர்.
இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் தேன்மொழி ஆஜரானார்.

Related Tags :
Next Story