பள்ளி மாணவியை தாக்கி நகை பறிக்க முயற்சி மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குலசேகரம் அருகே பள்ளி மாணவியை தாக்கி நகை பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
குலசேகரம்,
குலசேகரம் அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் செல்லம், கூலி தொழிலாளி. இவரது மகள் சரண்யா (வயது 14). இவர் களியலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சரண்யா நேற்று காலையில் பள்ளிக்கு செல்வதற்காக கரிப்பால்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், மாணவியை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
உடனே, மாணவி நகையை பிடித்து கொண்டு இடது கையால் கொள்ளையர்களை தடுத்தார். அப்போது, கொள்ளையர்கள் தங்களது கையில் இருந்த பிளேடால் மாணவியின் கையை சரமாரியாக கீறி தாக்க தொடங்கினர். இதில் கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ஆனாலும், மாணவி நகையை விடாமல், போராடிய நிலையில் அலற தொடங்கினார்.
தப்பி சென்றனர்
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் அந்த நபர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். தொடர்ந்து, படுகாயம் அடைந்த மாணவி குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story