வாகன சோதனையில் 97 சேலைகள், ரூ.1¾ லட்சம் பறிமுதல்
வாகன சோதனையில் 97 சேலைகள், ரூ.1¾ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கீழப்பழுவூர்,
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று வாரணவாசி கிராமத்தின் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி குருநாதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் 97 சேலைகள் கொண்டு சென்றது தெரிந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரேஷ்குமாரிடம் அதிகாரிகள் சேலைகளுக்கான ஆவணங்களை கேட்டனர். அப்போது சேலைகள் எடுத்து செல்வதற்கான ஆவணங்கள் இல்லாததால் சேலைகளை பறிமுதல் செய்து, கோட்டாட்சியர் சத்தியநாராயணனிடம் ஒப்படைத்தனர். இதனை யடுத்து அந்த சேலைகளை அரியலூர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் விளாங்குடி அருகே ஆதிச்சனூர் பகுதியில் தேர்தல் அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தஞ்சை மாவட்டம், தெற்கு கும்பகோணம், பாரதி நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணனிடம் சோதனையிட்ட போது அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.54 ஆயிரம் வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்று காலை கீழப்பழுவூர் அருகே அரியலூர்- திருச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாக்கடபுரம் கிராமத்தை சேர்ந்த மதுசூதனன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 640-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை கோட்டாட்சியர் சத்தியநாராயணனிடம் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story