தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பொது பார்வையாளர் அறிவுறுத்தல்
தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக ஓட்டுப் போட வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மண்டல அதிகாரிகளுக்கு, பொது பார்வையாளர் அறிவுறுத்தினார்.
திருச்சி,
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக மண்டல அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொது பார்வையாளர் அமித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சிவராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொது பார்வையாளர் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி தேர்தல் விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளனவா? என உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் சாய்வு தளங்கள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவிற்கு முன்பு வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கொடுக்க வேண்டும். தேர்தல் பணிக்கு போதுமான வாகனங்களை தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாகவும், நியாயமாகவும் ஓட்டுப்போட வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், கல்லூரி வளாகம் முன்பு விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் மூலமாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அனுமதி இல்லாமல் பார் நடத்தினால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுபான கடைகளை கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி தேர்தல் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், திருச்சி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ‘சி-விஜில்’ ஆப் மூலமாக இதுவரை வந்த 75 புகார்கள் குறித்தும், தொலைபேசி மூலமாக வந்த 19 புகார்கள் குறித்தும், அந்த புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார். மேலும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்டதாக ரூ.46 லட்சத்து 95 ஆயிரத்து 600 மற்றும் ரூ.2½ கோடி மதிப்பிலான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
கூட்டத்தில், ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாநகராட்சி ஆணையாளர் என்.ரவிச்சந்திரன், திருச்சி கோட்டாட்சியர் அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story