கட்டுமான நிறுவன அதிபர் கடத்தி கொலை சொகுசு காரில் பிணமாக கிடந்தார்
சேலையூர் அருகே தனியார் கட்டுமான நிறுவன அதிபர் சொகுசு காரில் கடத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக 2 பேர் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம் தென், அன்னை சத்யா நகரில் சாரதாம்மாள் தெருவில் உள்ள காலி இடத்தில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நிற்பதாக நேற்று மதியம் சேலையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை செய்தனர். பின்னர் காரை திறந்து பார்த்தபோது, அதில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், சொகுசு காரில் பிணமாக கிடந்தவர், சென்னையை அடுத்த கீழ்கட்டளை அருள்முருகன் நகர் விரிவு, 4-வது தெருவை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவன அதிபர் பழனிசாமி (வயது 42) என்பது தெரிந்தது.
பழனிசாமி நேற்று முன்தினம் மாலை ரஞ்சித்குமார் என்பவர் தனக்கு தர வேண்டிய பணத்தை வாங்கிவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சொகுசு காரில் வெளியே சென்றதாகவும், அதன்பிறகு வீடு திரும்பவில்லை எனவும், அவரது உறவினர்கள் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்து இருப்பதும் விசாரணையில் தெரிந்தது.
பணம் வாங்க வந்த பழனிசாமியை, மர்ம ஆசாமிகள் அவரது காரிலேயே கடத்திச்சென்று கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளனர். பின்னர் காரை அங்கு நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையில் பழனிசாமியை கொலை செய்ததாக சேலையூர், கஸ்பாபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம் (27) மற்றும் மாரிமுத்து (38) ஆகிய 2 பேர் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story