இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 42 பேர் போட்டி


இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 42 பேர் போட்டி
x
தினத்தந்தி 29 March 2019 10:30 PM GMT (Updated: 29 March 2019 10:27 PM GMT)

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 42 பேர் போட்டியிடுகிறார்கள். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

கரூர், 

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இறுதி நாளான 26-ந்தேதி வரை 54 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். மனுக்கள் பரிசீலனையின்போது முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 11 பேரின் மனுக்கள் நிரா கரிக்கப்பட்டன. எனவே 43 பேர் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் வாங்குவதற்கான கடைசி நாளான நேற்று ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி கலெக்டர் அன்பழகன் நேற்று மாலை வெளியிட்டார்.

42 வேட்பாளர்களின் பெயர்கள் அவர்கள் சார்ந்துள்ள கட்சி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் விவரம் வருமாறு:-

1)மு.தம்பிதுரை(அ.தி.மு.க.)---இரட்டை இலை

2) செ.ஜோதிமணி (காங்கிரஸ்)- கை

3) பி.எஸ்.என்.தங்கவேல் (அ.ம.மு.க.)-- பரிசு பெட்டி

4) இரா.ஹரிஹரன் (மக்கள் நீதி மய்யம்) ---- டார்ச் லைட்

5) ஆர்.கருப்பையா (நாம் தமிழர் கட்சி) ---- கரும்பு விவசாயி

6) ஆதிகிருஷ்ணன் (பகுஜன் சமாஜ் கட்சி) ---- யானை

7) நொய்யல் மா.ராமசாமி (தமிழ்நாடு இளைஞர் கட்சி)--- மோதிரம்

8) ம.மனோகரன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி) ---- ஒலிவாங்கி

9) ரா.ராமமூர்த்தி (உழைப்பாளி மக்கள் கட்சி) ----- தொப்பி

10) ஜெ.ஜோதிகுமார் (தேசிய உழவர் உழைப்பாளர் கழகம்) ---- உணவு கலன்

11) மு.அ.ஜோசப் (தேசிய மக்கள் சக்தி கட்சி) ----- கால்பந்து

சுயேச்சைகள்

12) த.அன்பழகன் --- வெண்டைக்காய்

13) சு.அன்புக்கனி --- வைரம்

14) டி.உலகநாதன் ---- ஊதல்

15) செ.எபினேசர் ----- கப் மற்றும் சாஸர்

16) த.ரா.கனகராஜ் ---- புகைப்படக்கருவி

17) பொ.கார்த்தி---டிராக்டர் இயக்கும் உழவன்

18 பா.கி.கார்த்திகேயன் ---- பேனா தாங்கி

19) மா.கார்த்திகேயன் ---- காலணி

20) செ.சதீஷ்குமார் ---- நிலக்கடலைகள்

21) க.சரஸ்வதி ---- தொலைபேசி

22) வி.சிவக்குமார் ----- மிட்டாய்கள்

23) க.செல்வராஜ் ----- திராட்சை

24) கே.தாசப்பிரகாஷ் ---- குடைமிளகாய்

25) மா.நாகஜோதி ---- வாணலி

26) பி.பழனிவேல் ----- தட்டச்சு எந்திரம்

27) கோ.பாபு ---------- சாவி

28) டி.பிச்சை முத்து ----- காலிபிளவர்

29) நா.பிரகாஷ் -------- பிரஷர் குக்கர்

30) த.பிரபாகரன் --------- கணினி

31) ச.புஷ்பஹென்ரிராஜ் --- கப்பல்

32) அ.மகாமுனி ------ பட்டாணி

33) கா.மகுடீஸ்வரன் ------- சங்கிலி

34) கே.ஆர்.பி. முத்து--------- தென்னந்தோப்பு

35) கு.முத்துகுமார் ------- பெஞ்சு

36) சி.பொ.ரவி -------- எந்திரன்

37) ம.ராமசந்திரன் -------- கோட்டு

38) ம.ராஜலிங்கம் ---------- விளக்கேற்றி

39) க.ராஜேஸ்கண்ணன்------- குழல் விளக்கு

40) மா.வரதன் ----- ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை

41) பி.விக்னேஷ்வரன் -------- தள்ளுவண்டி

42) ந.வினோத்குமார் -------- மின் கம்பம்

ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘நோட்டா’வுடன் சேர்த்து 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை தான் பதிவு செய்ய முடியும். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Next Story