மாணவர்கள் பாடத்துடன் செய்முறை பயிற்சிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் துணைவேந்தர் பேச்சு


மாணவர்கள் பாடத்துடன் செய்முறை பயிற்சிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் துணைவேந்தர் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 10:39 PM GMT (Updated: 29 March 2019 10:39 PM GMT)

மாணவர்கள் பாடத்துடன் செய்முறை பயிற்சிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் கல்வியியல் துறை மற்றும் பல்கலைக்கழக தொழில் முனைவோர் பயிற்சி மையமும் இணைந்து வீடியோ மற்றும் வீடியோ எடிட்டிங் செய்முறை பயிற்சிப்பட்டறை பல்கலைக்கழக அருங்காட்சியக அரங்கில் நடந்தது. துறைத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன் பேசும் போது கூறியதாவது:– கல்வி கற்பதும் செய்முறை பயிற்சியும் முக்கியம். மாணவர்கள் பாடவிளக்கத்தை மட்டும் படிக்காமல் செய்முறை பயிற்சிகளையும் திறம்பட கற்றுக்கொண்டு தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பல்வேறுதுறையில் உள்ள வேலைவாய்ப்புகளை எளிதில் அடைய மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை பெரிதும் உதவும் என்றார். இந்த தொழில்நுட்பம் பற்றி நிறைய நூல்களை படிக்க வேண்டும். புத்தகங்கள் படிக்க படிக்க நம் வாழ்க்கை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை அரினா அனிமே‌ஷன் தலைமை படத்தொகுப்பாளர் மாரிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்கள் தங்களது துறை சார்ந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால், தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளலாம் என்றார். மேலும் அனிமே‌ஷன் குறித்த அடிப்படை விளக்கங்களையும், எடிட்டிங் செய்வது மற்றும் வீடியோ எடுப்பது குறித்த செயல்முறை பற்றி மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் மொரார்ஜி வாழ்த்தி பேசினார். மேலும் காட்சிவழி தொடர்பியல் சம்பந்தமான கருத்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து நவீன கால உலகில் இன்றைய சூழலில் எடிட்டிங் மற்றும் வீடியோ எடுப்பதன் அவசியத்தை குறித்து பேசினார். இதில் பேராசிரியர்கள், பல்கலைக்கழக பல்வேறு துறை மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் ஜான்சன் நன்றி கூறினார்.


Next Story