காஞ்சீபுரத்தில் ரூ.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் வாலிபர் கைது
காஞ்சீபுரத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் களக்காட்டூர் மெயின் ரோட்டில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையொட்டி அவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் களக்காட்டூரில் உள்ள அந்த குடோனுக்கு சென்றார். குடோனை திறந்து பார்த்தபோது பெட்டி பெட்டியாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்ததாக காஞ்சீபுரம் களக்காட்டூர் மெயின் ரோட்டை சேர்ந்த காசிமுருகன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக களக்காட்டூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார், கண்ணதாசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story