அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திருப்போரூரில் சரத்குமார் பிரசாரம்


அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திருப்போரூரில் சரத்குமார் பிரசாரம்
x
தினத்தந்தி 31 March 2019 3:45 AM IST (Updated: 31 March 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் மானாமதி பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் அ.தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம்குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திருப்போரூர் மானாமதி பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், ‘அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. புலவாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவர் பிரதமர் மோடி. தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களிலும் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும். வைகோ ஈழத்தமிழர் படுகொலை பற்றி பேசி வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது மேடைக்கு மேடை ஈழ தமிழர் படுகொலை பற்றி பேசிவிட்டு மீண்டும் தி.மு.க. மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைத்து கொண்டது சரியா?’ என்று தெரிவித்தார். பிரசாரத்தின்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் வளர்மதி, திருப்போரூர் ஒன்றியச்செயலாளர் குமரவேல் உள்ளிட்டோர் பிரசார வேனில் நின்று மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.


Next Story