எங்களுக்கு யாரும் போட்டியே கிடையாது: “3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” எச்.வசந்தகுமார் பேட்டி
கன்னியாகுமரி தொகுதியில் எங்களுக்கு யாரும் போட்டியே கிடையாது. 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று எச்.வசந்தகுமார் கூறினார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக எச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவர் மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.
நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. புதிய தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத், வேட்பாளர் எச்.வசந்தகுமார், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோதங்கராஜ், ஆஸ்டின், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அன்வர்சதாத், தி.க. வெற்றிவேந்தன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிதாக திறக்கப்பட்டு உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தங்களது எண்ணங்களை தெரிவிக்கலாம். குமரி மாவட்டத்தில் வெறும் கல்லை மட்டும் நட்டுவிட்டு துறைமுகம் வந்துவிட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். துறைமுகம் அமைக்க 587 ஏக்கர் நிலம் வேண்டும். அதுவே சிறிய துறைமுகம் என்றால் 350 ஏக்கர் நிலம் தேவைப்படும்.
எனினும் கடலுக்குள் துறைமுகம் அமைத்தாலும் அங்கிருந்து உடைத்து எடுக்கப்படும் பாறைகளை குடியிருப்பு பகுதிகளில் தான் போட வேண்டும். எனவே குமரி மாவட்டத்தில் ஏற்கனவே இருக்கின்ற மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்த வேண்டும். இதனால் மக்களின் வாழ்வாதாரம் அழியாது.
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஆகிய வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் மோடி அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குமரி மாவட்டத்தில் விமான நிலையம் வரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தற்போது கூடங்குளம்தான் விமான நிலையம் அமைக்க சரியான இடம் என்று கூறுகிறார்.
என்னை வெளியூர்காரன் என்கிறார்கள். இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்த நான் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட கூடாது. எனக்கு ஓட்டுரிமை இங்கு தான் உள்ளது. எனவே நான் வெளிநாட்டு பறவை இல்லை.
நான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்றதும் எங்களது முதல் பணி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதுதான். எதிர்க்கட்சிகளை மிரட்டவும், பழிவாங்கும் உணர்வுடனும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.
வளர்ச்சி திட்டங்களை எம்.எல்.ஏ.க்கள் தடுக்கவில்லை. மக்களை அழிக்கும் திட்டங்களைதான் தடுக்கிறார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட எங்களுக்கு யாரும் போட்டியே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து எச்.வசந்தகுமார் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

Related Tags :
Next Story