தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் பிரசாரம்
புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் பிரசாரம் தொடங்கினார்.
புதுச்சேரி,
புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணி வேட்பாளராக வெங்கடேசன் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். நேற்று காலை முதல் தொகுதியில் அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
முன்னதாக முத்துலிங்கம்பேட்டையில் உள்ள மாரியம்மன்கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வெங்கடேசன் சாமிகும்பிட்டார். அதைத்தொடர்ந்து முத்துலிங்கம்பேட்டை பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
இந்த வாக்குசேகரிப்பின்போது தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், பொருளாளர் செந்தில்குமார், தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் சபாபதி மோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விசுவநாதன், செயற்குழு உறுப்பினர் சேதுசெல்வம், காங்கிரஸ் துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் ஜனார்த்தனன், வின்சென்ட், சிவாஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வேலு, ஜாக்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதன்பின் நேற்று மாலை செயிண்ட்பால் பேட் பகுதியில் வீடுவீடாக சென்று வெங்கடேசன் வாக்குசேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Related Tags :
Next Story