மத்தூர் அருகே தீக்காயம் அடைந்த பெண் சாவு


மத்தூர் அருகே தீக்காயம் அடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 1 April 2019 4:00 AM IST (Updated: 31 March 2019 10:06 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே வெல்லம் காய்ச்சிய போது தொட்டியில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்கரை. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 53). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று கணவன்-மனைவி உள்ளிட்டவர்கள் வெல்லம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது பழனியமமாள் எதிர்பாராதவிதமாக வெல்லம் காய்ச்சும் தொட்டியில் தவறி விழுந்தார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story