களக்காடு-ஏர்வாடி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர பிரசாரம்


களக்காடு-ஏர்வாடி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 31 March 2019 10:00 PM GMT (Updated: 2019-04-01T00:23:49+05:30)

களக்காடு, ஏர்வாடி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

ஏர்வாடி, 

களக்காடு, ஏர்வாடி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

மனோஜ் பாண்டியன் பிரசாரம்

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் நேற்று களக்காடு பகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சிங்கிகுளத்தில் காலை 8 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து வடவூர்பட்டி, கீழ உப்பூரணி, சடையமான்குளம், காடுவெட்டி, அப்பர்குளம், மீனவன்குளம், கள்ளிகுளம், துவரைகுளம், பொத்தைசுத்தி, பெருமாள்குளம், கல்லடி, சிதம்பரபுரம், தேவநல்லூர், பத்மநேரி, கருவேலங்குளம், கீழப்பத்தை, மஞ்சுவிளை, மேலப்பத்தை, கலுங்கடி, களக்காடு கோட்டை, மூங்கிலடி, சிதம்பரபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றும், வீதிவீதியாக நடந்து சென்றும் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.

மாலையில் ஏர்வாடி, திருக்குறுங்குடி, தளவாய்புரம் பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “எனது தந்தை பி.எச்.பாண்டியன் வழியில் இப்பகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன். இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை. தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி வலிமையான பிரதமர் ஆவார். அவர் மீண்டும் இந்திய பிரதமராக எனக்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.

கலந்து கொண்டவர்கள்

பிரசாத்தில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பிரபாகரன் எம்.பி., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் ஸ்டாலின் துரைசிங், பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் ஜோதி, ஒன்றிய தலைவர் ராமேஸ்வரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெயபாலன், பெருந்தலைவர் மக்கள் கட்சியை சேர்ந்த செந்தில்குமார், ச.ம.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் பிராங்களின் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

Next Story