நெல்லையில் இருந்து 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன


நெல்லையில் இருந்து 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன
x
தினத்தந்தி 31 March 2019 9:30 PM GMT (Updated: 2019-04-01T00:37:16+05:30)

நெல்லையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2-ம் கட்டமாக இன்று (திங்கட்கிழமை) தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்ககப்படுகின்றன.

நெல்லை, 

நெல்லையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2-ம் கட்டமாக இன்று (திங்கட்கிழமை) தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்ககப்படுகின்றன.

நாடாளுமன்ற தொகுதி

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன.

தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் என 6 தொகுதிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நெல்லை சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், ஆலங்குளம் தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளும், அம்பை தொகுதியில் 295 வாக்குச்சாவடிகளும், கடையநல்லூர் தொகுதியில் 325 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

வாக்குச்சாவடிகள்

நாங்குநேரி தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், சங்கரன்கோவில் தொகுதியில் 274 வாக்குச்சாவடிகளும், வாசுதேவநல்லூர் தொகுதியில் 271 வாக்குச்சாவடிகளும், தென்காசி தொகுதியில் 316 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,982 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

நெல்லையை அடுத்த ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

முதற்கட்டமாக கடந்த 29-ந் தேதி 3 ஆயிரத்து 579 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 3 ஆயிரத்து 579 கட்டுப்பாட்டு கருவிகளும், யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை சரிபார்ப்பதற்கான 4 ஆயிரத்து 146 எந்திரங்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று அனுப்பப்படுகிறது

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் 26 வேட்பாளர்களும், தென்காசி தொகுதியில் 25 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். அதனால் வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது. கூடுதலாக எந்திரங்கள் இன்று (திங்கட்கிழமை) 2-ம் கட்டமாக லாரி மூலம் தாலுகா அலுவலகங் களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது என நெல்லை மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்தார்.

Next Story