புனேயில் நடுரோட்டில் பெண் என்ஜினீயர் மானபங்கம் கும்பலுக்கு வலைவீச்சு


புனேயில் நடுரோட்டில் பெண் என்ஜினீயர் மானபங்கம் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 April 2019 4:30 AM IST (Updated: 1 April 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் நடுரோட்டில் வைத்து பெண் என்ஜினீயர் மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக காரில் வந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புனே,

புனேயில் நடுரோட்டில் வைத்து பெண் என்ஜினீயர் மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக காரில் வந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மானபங்கம்

புனேயில் உள்ள ஒரு நிறுவனத்தில் 26 வயது இளம்பெண் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் ஸ்கூட்டியில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரை நெருங்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்ற போது, இளம்பெண் சென்ற ஸ்கூட்டியை காரில் வந்தவர்கள் இடைமறித்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து இறங்கிய கும்பல் பெண் என்ஜினீயரை நடுரோட்டில் வைத்து கையை பிடித்து இழுத்தும், தொடக்கூடாத இடத்தை தொட்டும் மானபங்கம் செய்தனர்.

போலீஸ் வலைவீச்சு

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சல் போட்டார். இதனால் பயந்து போன அந்த கும்பலினர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்று விட்டனர். அப்போது பெண் என்ஜினீயர் அவர்களது கார் பதிவெண்ணை குறித்து வைத்துக் கொண்டார்.

பின்னர் இதுபற்றி அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் என்ஜினீயரை மானபங்கம் செய்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
1 More update

Next Story