கருப்பர் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி ஊர்குளத்தான்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு


கருப்பர் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி ஊர்குளத்தான்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 31 March 2019 10:21 PM GMT (Updated: 31 March 2019 10:21 PM GMT)

திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கருப்பர் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியில் பிரசித்தி பெற்ற கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வருடாபிஷேக விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கியது. வடமாடு மஞ்சுவிரட்டில் மாடுகளுடன், மாடுபிடி வீரர்கள் அடங்கிய குழுக்களும் பங்கு கொண்டனர்.

இதில் மதுரை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுகளும், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மாடுபிடி வீரர்களும் களத்தில் இருந்தனர். ஒரு மாட்டிற்கு 20 நிமிடங்கள் வீதம் நேரம் ஒதுக்கப்பட்டு, அதில் 9 வீரர்கள் மாடுபிடிப்பதில் இறங்கினர். ஒருசில மாடுகள் வெற்றியும், பல மாடுபிடி வீரர்கள் குழுக்கள் வெற்றியும் பெற்றன.

வெற்றி பெற்ற மாடுகளுக்கும், வீரர்களுக்கும் கட்டில், பீரோ, குத்துவிளக்கு, சைக்கிள், கிரைண்டர், மிக்ஸி முதலியவை பரிசாக வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவா டானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரான கர்ணாஸ் மாடுகளுக்கு மரியாதை செலுத்தி மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

இதில் மாவட்டச் செயலாளர் வெள்ளச்சாமி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர்குளத்தான்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.

Next Story