மாவட்ட செய்திகள்

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து படகில் சென்று மாணவர்கள் விழிப்புணர்வு + "||" + The students are aware of the 100 per cent voter going to the boat

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து படகில் சென்று மாணவர்கள் விழிப்புணர்வு

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து படகில் சென்று மாணவர்கள் விழிப்புணர்வு
100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நாகையில் மாணவர்கள், படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாகப்பட்டினம்,

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மக்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள், படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கரைப்பேட்டை பாலம் அருகில் இருந்து புதிய மீன் இறங்கும் தளம் வரை சுமார் 150 மீட்டர் தூரம் 2 படகுகளில் பயிற்சி மைய மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


அப்போது அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, கடலுக்கு மீன்பிடிக்க சென்று கொண்டிருந்த மீனவர் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி அருகே, மாமன் மகளான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் 2 மாணவர்கள் கைது
திருச்சி அருகே மாமன் மகளான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
2. கட்டாய கல்வி சட்டப்படி அனுமதிக்கப்படும் ஏழை மாணவர்களை கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கும் நிலை; மாவட்ட கல்வித்துறை பாராமுகம்
கட்டாய கல்வி சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படும் ஏழை, எளிய மாணவர்களிடம் கட்டணம் செலுத்த நிர்ப் பந்திக்கும் நிலை உள்ளது. இதில் கல்வித்துறை பாராமுகம் காட்டுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
3. மாணவர்கள் விரும்பும் படிப்புகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் - அரசு செயலாளர் அறிவிப்பு
மாணவர்கள் விரும்பி படிக்கும் படிப்புகளில் கூடுதல் இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் அன்பரசு கூறினார்.
4. 98.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி: பிளஸ்-1 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 98.03 சதவீதம் தேர்ச்சியை பெற்று மாநிலத்திலேயே ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது.
5. கரூர் அரசு கலைக்கல்லூரி உதவி மையத்தில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.