காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சிற்றம்பலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சிற்றம்பலம்,
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைதொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி ஆர்ச் அருகில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒட்டங்காடு அருகே உள்ள விளக்கு வெட்டிக்காடு பகுதியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதிக்கு சென்ற ஒரு காரை வழி மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையில் காரில் ரூ.3 லட்சம் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விளக்கு வெட்டிக்காடு பகுதியை சேர்ந்த ரெங்கசாமி மகன் கண்ணன் என்றும், கீரமங்கலத்தில் உள்ள வங்கிக்கு பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
அந்த பணத்துக்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து அதிகாரிகள் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து பேராவூரணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணனிடம் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story