கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி

டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று கந்தர்வகோட்டையில் நேற்று காலை நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கந்தர்வகோட்டை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு, புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் நேற்று காலை கந்தர்வகோட்டையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து பேசினார்.
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மூலமாக இந்திய திருநாட்டிற்கு வலிமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி உருவாக வேண்டும். இதற்கு நீங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மீண்டும் மோடி பிரதமரானால் நாடு பாதுகாப்பாக இருக்கும். நாட்டு மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் கிடைக்கும்.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் வாக்குவங்கி உள்ள கட்சிகள். நமது கூட்டணியில் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிகள் உள்ளன. இதனால் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய மக்கள் தயாராகி விட்டனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் மிரண்டு போய் தேர்தல் தோல்வி பயத்தில் மேடையில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருகிறார்.
நமது கூட்டணியின் நோக்கம் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதை நிறைவேற்றுவது தான் ஆகும். மத்தியில் நமது கூட்டணி கட்சியின் ஆட்சி அமைந்தால், தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டு உள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும். கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம். இந்த திட்டம் வரும்போது டெல்டா விவசாயிகள் பயன்பெறுவார்கள். காவிரி-கொள்ளிடம் உபரி நீர் திட்டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிமராமத்து திட்டங்கள் மூலமாக ஆங்காங்கே உள்ள குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு நன்மை செய்யும் ஆட்சியாக நமது ஆட்சி அமைந்து உள்ளது. கடலில் கலக்கும் உபரிநீரை தடுக்கும் வகையிலும், மழைநீரை சேமிக்கும் வகையிலும் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. உடனடியாக ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் தேர்தல் ஆணையத்திற்கு சென்றார். இதனால் தற்போது இந்த திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் கட்டாயம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். கட்சி என்பது, மக்களுக்கு சேவை செய்யத்தான் இருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. மக்களுக்காக கொண்டு வரும் அனைத்து நல திட்டங்களையும் தடுத்து நிறுத்துகின்ற கட்சி ஆகும்.
கந்தர்வகோட்டையில் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோல கந்தர்வகோட்டையில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் புதிய அரசு தொழில்நுட்ப கல்லூரி போன்றவை தொடங்கப்பட்டு உள்ளன. இதேபோல பல எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கந்தர்வகோட்டை ஊராட்சி விரையில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி தொகுதி வேட்பாளர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை முடித்து விட்டு திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றார். முன்னதாக கந்தர்வகோட்டைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கந்தர்வகோட்டைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் முதல்-அமைச்சர் பேசும் இடத்தின் அருகே உள்ள பெரிய கட்டிடங்களின் மீது நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாத்தூரில் கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து பேசினார். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த அ.தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். கிராமங்களில் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். ஏழை மாணவ-மாணவிகள் படிப்பதற்காக குடுமியான்மலையில் அரசு வேளாண்மை கல்லூரி, விராலிமலையில் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.340 கோடி மதிப்பில் விராலிமலை தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வழங்கும் திட்டம், விராலிமலை முருகன் கோவிலுக்கு சாய்தள மலைப்பாதை மற்றும் வெள்ளித்தேர் அமைத்தும் மலை மேல் வாகனங்கள் செல்வதற்கு சாலை மற்றும் லிப்ட் வசதி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாத்தூரில் சிப்காட் அமைத்து பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் செல்லும் கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் இல்லை எனவும், ஆள் இல்லாத இடத்தில் பேசுவதாகவும் ஸ்டாலின் கூறுகிறார். இங்கு ஒலிக்கும் குரல் ஸ்டாலின் செவியை துளைத்துக் கொண்டு செல்ல வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியின் வலிமை தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க.வினர் விஞ்ஞான மூளை படைத்தவர்கள். கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்த கட்சி தி.மு.க. தான். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்பு வரும்போது சிலர் வேறு இடத்தில் இருப்பார்கள்.
சட்டமன்றத்தில் தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். சட்டமன்றத்தில் பேரவை தலைவரை பிடித்து கீழே தள்ளிவிட்டு விட்டு, அவரது இருக்கையில் தி.மு.க.வினர் போய் அமருகின்றனர். இவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால், நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?. சட்டமன்றத்தை விட்டு வெளியே வரும்போது ஸ்டாலின் சட்டையை கிழித்து கொண்டு வந்தார். நல்லா இருக்கும் மனிதர் யாராவது சட்டையை கிழித்து கொண்டு வெளியே வருவார்களா? இவ்வாறு வெளியே வந்து விளம்பரத்தை தேடிக் கொள்கிறார் ஸ்டாலின்.
கருணாநிதிக்கே ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாமல், 2 ஆண்டுகளாக செயல் தலைவராக வைத்திருந்தார். கொல்லை புரத்தின் வழியாக வந்து இந்த ஆட்சியை கவிழ்ந்து விடலாம். அ.தி.மு.க. கட்சியை உடைத்து விடலாம் என நினைத்தால் தோல்வி தான் கிடைக்கும். அ.தி.மு.க.வை வெல்லும் சக்தி தி.மு.க.விற்கு இல்லை.
ரூ.150 கோடி மதிப்பீட்டில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 2 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படும். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு எதிரே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும். புதுக்கோட்டை நகராட்சியில் நுழையும்போது ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் புதுக்கோட்டைக்கு அழகு சேர்க்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை முடித்து கொண்டு, ஆலங்குடிக்கு சென்றார். அங்குள்ள சந்தைபேட்டையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க.வின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு திருமயத்திற்கு சென்றார். அங்கு அண்ணா கலையரங்கம் அருகே எச்.ராஜாவை ஆதரித்து பேசினார். பின்னர் முதல்-அமைச்சர் பிரசாரத்தை முடித்து கொண்டு திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story