ராகுலிடம் போனில் பேசி மேகதாது பிரச்சினையை தீர்ப்பாரா ஜோதிமணி? டி.டி.வி.தினகரன் கேள்வி
ராகுலிடம் போனில் பேசி மேகதாது பிரச்சினையை ஜோதிமணி தீர்ப்பாரா? என கரூரில் பிரசாரத்தின் போது டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பினார்.
கரூர்,
கரூர் நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேலுவை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2014-ல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மோடி ஆட்சியை பிடித்தார். அப்போது தமிழகத்தில் மட்டும் பெரும்பான்மையாக ஜெயலலிதாவினால் அ.தி.மு.க. 37 இடங்களை பெற்றது. அவர் இருந்தவரை தமிழகத்தில் மோடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழகத்தை வஞ்சித்து விட்டனர்.
கஜா புயல் சீற்றம், 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்திற்கு மோடி ஏன் வரவில்லை என பரவலாக மக்கள் கேட்கின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில், தமிழகத்தில் எங்கு வாக்களித்தீர்கள் மோடி வருவதற்கு? என்று எச்.ராஜா கூறுகிறார். இது ஆட்சி அதிகார பலத்தில் பேசுவது போல் உள்ளது. எனினும் தேர்தலையொட்டி வாக்கு கேட்க மோடி வருவார். அதற்கு மக்கள் தான் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் அ.ம.மு.க. தான் துணிச்சலுடன் தனியாக நின்று வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இருட்டில் செல்ல பயப்படுகிறவர்கள் உடன் 4 பேரை அழைத்து செல்வது போல தான் தி.மு.க. கூட்டணி உள்ளது.
அந்த கட்சிகளுக்குள்ளேயே கொள்கை முரண்பாடு இருக்கிறது. எனவே தமிழக மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தி.மு.க. கபட நாடகம் ஆடுகின்றனர்.
கரூரில் தம்பிதுரை போகிற இடமெல்லாமல் எதிர்ப்பு வலுக்கிறது. அவர் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் எம்.பியாக இருந்து தத்தெடுத்து கரூர் ஒன்றியம் பாலவிடுதி கிராமமே அதற்கு சாட்சியாகும். அங்கு குடிக்க தண்ணீரின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். அஞ்சல் அலுவலகம் கூட நாடகமேடையில் தான் செயல்படுகிறது. நான் இதை அரசியலுக்காக சொல்லவில்லை. யாருக்காவது சந்தேகம் இருந்தால் நேரில் சென்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நான் ராகுல்காந்தியிடம் செல்போனிலேயே பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கூறுகிறார். கர்நாடகாவிலே காங்கிரசை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அங்கு மேகதாது அணை கட்ட முனைப்புடன் இருக்கிறார். ராகுலிடம் இதனை எடுத்து கூறி மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க முடியுமா? என்றால் முடியாது. காரணம் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிலைப்பாடுடன் உள்ளது. எனவே தமிழகத்தின் தேவையை பெற்று தரவும், உரிமையினை நிலைநாட்டவும் அ.ம.மு.க. வேட்பாளரை பரிசுபெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story