கன்னிவாடி வனப்பகுதியில் தீ வைத்த 2 பேர் கைது
கன்னிவாடி வனப்பகுதியில் தீ வைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கன்னிவாடி,
கன்னிவாடி வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள், அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. இந்தநிலையில் வனப்பகுதியில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து வருகின்றனர். இதனால் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து வருகின்றன. மேலும் வன விலங்குகளும் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் கன்னிவாடி வனச்சரகர் ரவிச்சந்திரன் தலைமையில் வனவர் ரங்கநாதன், வனக்காவலர் செல்வராஜ் ஆகியோரை கொண்ட குழுவினர் பன்றிமலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முட்டுக்கோம்பை என்னுமிடத்தில் உள்ள மரங்களுக்கு 2 பேர் தீ வைத்து கொண்டிருந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் தருமத்துப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 42), சுரேஷ் (27) என்று தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
Related Tags :
Next Story