மாணவன்-விவசாயியை கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளியது யார்? மதுரை பிரசாரத்தில் சீமான் கேள்வி

“மாணவர்கள்-விவசாயிகளை கடன் வாங்கும் நிலைக்கு தள்ளியது யார்?” என்று மதுரை பிரசாரத்தில் பேசிய சீமான் கேள்வி எழுப்பினார்.
மதுரை,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாண்டியம்மாள் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அருண்மொழி தேவன் ஆகியோரை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேசியதாவது:-
அரசியல் என்பது மனிதனுடைய வாழ்வியலில் கலந்த ஒன்று. அரசியல் வேண்டாம் என்பது தவறான கருத்து. நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்கக் கூடாது. நீங்கள் அரசியலை விட்டு விலகினாலும், அரசியல் உங்களை விட்டு விலகாது.
கச்சத்தீவை கொடுத்தது கொடுத்தது தான். திருப்பி வாங்க முடியாது எனக் கூறுகிறது காங்கிரஸ். கச்சத்தீவை மீட்டு தருவதாக தி.மு.க. கூறுகிறது. இதுபோல், அ.தி.மு.க.வும் கச்சத்தீவை மீட்போம் என்கிறது. ஆனால், பா.ஜ.க. அதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கூறுகிறது.
கொள்கை முரண்பாடுகளை கொண்ட இந்த கட்சிகள் ஒருவருக்குள் ஒருவராக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. பா.ஜ.க.-காங்கிரஸ் கட்சிகளை தராசு தட்டில் தனித்தனியாக வைத்தால், சரிசமமாக இருப்பார்கள். இதுவரை மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க.- அ.தி.மு.க. என்ன செய்தது?
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என கூறுவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்ற சொல்லை சொல்வதற்கு தகுதி உடைய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். நாங்கள் வெற்றி பெற்றால் தரமான இலவச கல்வி, இலவச மருத்துவம், குடிநீர் வழங்குவோம். நீர் நிலைகளை பெருக்கவும், மேம்படுத்தவும் இதுவரை ஆண்ட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. இந்த தேர்தல் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக இல்லை, தனியார் நிறுவனத்திற்கான புரோக்கர்களை தேர்வு செய்யும் தேர்தலாக உள்ளது.
தமிழக மக்களின் உணர்வு, உரிமை, உயிர் காக்க இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் எதுவும் செய்யவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அல்லது நேரில் வந்து பார்க்காத பிரதமர், தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழகத்திற்கு வந்து செல்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த மோடி அரசு, இதுவரை எந்த வித சட்ட திருத்தத்தையும் கொண்டு வரவில்லை.
தமிழகம் முழுவதும் மக்கள் தெருத்தெருவாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாங்கள் தூய ஆட்சி நடத்தி வருகிறோம் என ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இவர்களால் தேர்தலில் போட்டியிட முடியுமா?. ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறான விஷயம். ஓட்டுக்கு பணம் வாங்கினால் அது தேச துரோகம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்குவோம். மக்களை சந்திக்காத நிர்மலா சீதாராமன் மத்திய மந்திரி சபையில் இருக்கிறார், மக்களால் தோற்கடிக்கப்பட்ட அருண்ஜெட்லி நிதி மந்திரியாக இருக்கிறார். இந்த நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாகி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி, மாணவர் கல்வி கடன் தள்ளுபடி என தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.
விவசாயியை கடன் வாங்கும் நிலைக்கும், மாணவனை கடன் வாங்கும் நிலைக்கும் தள்ளியது யார்? என மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் மாற்றம் வரும். நிலையான விவசாயிக்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது வரலாற்று கடமை. எனவே விவசாயி சின்னத்தில் வாக்களித்து எங்களது வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story