சேந்தமங்கலம் அருகே கோவிலில் திருடிய 2 பேர் கைது


சேந்தமங்கலம் அருகே கோவிலில் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2019 4:30 AM IST (Updated: 6 April 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே கோவிலில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு கதவை உடைத்து கொண்டு 2 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடினர்.

அப்போது உண்டியல் உடைக்கும் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம நபர்கள் பதற்றத்தில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடினர். ஆனால் பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்து சேந்தமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.2 ஆயிரத்து 500 திருடியதை ஒப்புக்கொண்டனர்.

பிடிபட்டவர்கள் நாமக்கல் அருகே உள்ள ராமாபுரம்புதூரை சேர்ந்த சாமிநாதன் மகன் சரவணன் (வயது 23), மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story