பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ராஜ்நாத் சிங் இன்று பிரசாரம்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பெரம்பலூரில் இன்று பிரசாரம் செய்ய வருகை தரவுள்ளார்.
பெரம்பலூர்,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வருகிற 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தங்களது தோழமை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். மேலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியின் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், நடிகர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் பெரம்பலூர், மதுரை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
அதற்காக ராஜ்நாத் சிங் இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைகிறார். பின்னர் 2.45 மணியளவில் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.05 மணிக்கு பெரம்பலூர் ராமகிருஷ்ணா கல்வி நிறுவன வளாகத்தில் வந்து இறங்குகிறார். இதையடுத்து அவர் கார் மூலம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மேற்கு வானொலி திடலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மாலை 3.20 மணியளவில் கலந்து கொண்டு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து மாலை 4.10 மணி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் பிரசாரத்தை முடித்து கொண்டு பெரம்பலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமானநிலையத்துக்கு சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் இரவு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். பெரம்பலூரில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தினை நேற்று பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Tags :
Next Story