தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் உறுதி


தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
x
தினத்தந்தி 7 April 2019 10:45 PM GMT (Updated: 2019-04-08T04:13:07+05:30)

தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் உறுதி அளித்தார்.

புதுச்சேரி,

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் தொழிலதிபர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவர் நாள் தோறும் தொகுதி முழுவதும் தனது கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று காலை லட்சுமிநகர், அய்யப்பசாமி நகர், மகாத்மாகாந்தி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

அப்போது அவருடன் தி.மு.க. அமைப்பாளர்கள் எஸ்.பி. சிவக்குமார், சிவா எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் சேது செல்வம், தொகுதி செயலாளர் முருகன், வட்டார காங்கிரஸ் தலைவர் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஜான்சன், வேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அந்த பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் சரியான சாலை வசதி இல்லை, குண்டும் குழியுமாக உள்ளது. கழிவுநீர் செல்ல வாய்க்கால் வசதி இல்லை. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. சுத்தமான குடிநீர் இதுவரை வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். உடனே வெங்கடேசன் அவர்களிடம் என்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதி முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். தொகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்று உறுதி அளித்தார்.


Next Story