அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
அயோத்தியாப்பட்டணம் பகுதியில் கள்ளக் குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன் கவுதம சிகாமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அயோத்தியாப்பட்டணம்,
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன் கவுதம சிகாமணி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள வீராணம், சின்னனூர், பள்ளிப்பட்டி, மேட்டுப்பட்டி, தாதனூர், குள்ளம்பட்டி, வள்ளாங்குண்டம், காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, எம்.எருமாபாளையம், கருமாபுரம், சின்னகவுண்டாபுரம், பெரிய கவுண்டாபுரம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, அதிகாரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி, பூவனூர், சுக்கம்பட்டி, குப்பனூர் மற்றும் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வாக்கு சேகரிப்பின்போது பொன் கவுதம சிகாமணி பேசியதாவது:-
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றப்படும். விவசாயிகளுக்கு 5 பவுன் நகை கடன், மாணவர்களுக்கு கல்வி கடன்கள்ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பேசினார்.
இதில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, ஏற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தநாரி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.பி.வைத்திலிங்கம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் கவுதமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய அவைத்தலைவர் ராயப்பன், நகர செயலாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story