தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்து பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்து பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 April 2019 4:30 AM IST (Updated: 10 April 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்து பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நாகையில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை கிராமத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அதைத்தொடர்ந்து நாகை அபிராமி அம்மன் திருவாசலில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நடிகைகளோடு நான் சுற்றுவதாக அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். நான் ஒரு நடிகனாக இருந்தும் நடிகைகளோடு சுற்றவில்லை. கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை சுற்றி வந்தேன். ஆனால் அவர், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் தொகுதி பக்கமே வரவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதம் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. அமைச்சர்களின் மீது கவர்னரிடம் புகார் அளித்துவிட்டு, இந்த மாதம் அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 13 வயதில் கட்சியில் வட்ட, நகர, மாவட்ட செயலாளர், மேயர், எம்.எல்.ஏ., துணை முதல்-அமைச்சர் என பல்வேறு பொறுப்புகள் வகித்து கட்சியை வழி நடத்தி செல்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்து பா.ஜனதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story