தளவாய்பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர்-கிளனர் உயிர்தப்பினர்


தளவாய்பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர்-கிளனர் உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 10 April 2019 4:00 AM IST (Updated: 10 April 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் அந்த லாரி சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நொய்யல்,

குஜராத்தில் இருந்து சீரகம், கசகசா உள்ளிட்ட மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு மதுரையை நோக்கி நேற்று ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கரூர் மாவட்டம் தளவாய்பாளையம் அருகே கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் அந்த லாரி சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கிளனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த வேலாயுதம் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story