பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* மூர்மார்க்கெட்-அரக்கோணம் மாலை 5.45, இரவு 7.45, 10.45, 11.10 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி காலை 4, 11.45 மணி, மூர்மார்க்கெட்-திருப்பதி காலை 7.20, 9.50, இரவு 7.10 மணி, மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 7.45 மணி, திருப்பதி-மூர்மார்க்கெட் காலை 7.20 மற்றும் மதியம் 1.30 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் மாலை 4.50 மணி, சென்னை கடற்கரை-அரக்கோணம் காலை 10.30 மணி, அரக்கோணம்-கடற்கரை மதியம் 1.30 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இரவு 11.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று(வியாழக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.
* சென்னை கடற்கரை-அரக்கோணம் நள்ளிரவு 1.20, காலை 4.20 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் காலை 5.30, 6, 6.45, 8.20, 9.10, 11.05, மதியம் 12.50, 1.40, மாலை 4, 4.45, 5.15, 6.05, 6.40, இரவு 7.30, 8, 9.15, 10.45 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி காலை 7.05, 10, மதியம் 2.20, 3.30, மாலை 5.40, இரவு 7, 8.15 மணி, வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் திருவாலங்காடு ரெயில் நிலையம் வரை மட்டுமே இன்று முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படும்.
* அரக்கோணம்-மூர்மார்க்கெட் காலை 3.58, 4.53, 6.53, 7.35, 8.30, 9.10, மதியம் 2.05, 3.53, 6.13, இரவு 7.08, 7.55, 8.38, 9.23, 10.05 மணிக்கு திருவலங்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். திருத்தணி-மூர்மார்க்கெட் காலை 6.15, 7.03, 10.15, மதியம் 1.45, 2.30, மாலை 4.18, 5.03, 6.38, இரவு 8.58 மணி, அரக்கோணம்-வேளச்சேரி காலை 4.13, 7.50 மணி, அரக்கோணம்- கடற்கரை காலை 6.36 மணிக்கு திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் 14-ந் தேதி வரை புறப்படும்.
*வேளச்சேரி-அரக் கோணம் மதியம் 1.35 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரை- அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் அரக் கோணம்-வேளச்சேரி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் அரக்கோணம்- கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story