6 முறை கூட்டணி அமைத்து தி.மு.க., காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது ப.சிதம்பரம் பேச்சு


6 முறை கூட்டணி அமைத்து தி.மு.க., காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 10 April 2019 10:45 PM GMT (Updated: 10 April 2019 8:19 PM GMT)

6 முறை கூட்டணி அமைத்து தி.மு.க., காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது கீரமங்கலத்தில் ப.சிதம்பரம் பேச்சு.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சந்தை பேட்டையில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மெய்யநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகையில், இந்திரா காந்தி காலத்தில் இருந்து தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் 6 முறை கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்டது. அந்த தேர்தல்கள் அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதேபோல இந்த முறையும் வெற்றி கிடைக்கும். தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது எழுந்த எழுச்சி போராட்டத்தில் பலர் உயிர் நீத்தனர். அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது வடக்கே இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க., தமிழகம் போன்ற மாநிலங்களில் நேரடியாக இந்தியை திணிக்க முடியாமல் சமஸ்கிருதத்தை திணிக்க நினைக்கிறது. தந்தை பெரியார் மண்ணில் அவரை அவமதித்துவிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவு தகர்ந்து போகும். பண மதிப்பிழப்பால் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் சிறுகுறு தொழில்கள் முடங்கியது. 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார். கஜா புயலில் ஒன்றரை கோடி தென்னை மரங்கள் ஒடிந்து சாய்ந்தது. 89 பேர் உயிரிழந்தார்கள். ஒரு இரங்கல் கூட சொல்லவில்லை. விவசாயிகளின் துயரம் எங்களுக்கு தெரியும். அதனால் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் போது மீண்டும் விவசாய கடன், ரத்து செய்யப்படுவதுடன் மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். முன்பு சொன்னோம் செய்தோம். இப்போதும் சொல்கிறோம் செய்வோம் என்று கூறினார்.

இதேபோல் ஆலங்குடி வட்டஞ்கச்சேரி திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். 

Next Story