“சைக்கிளை விட ஆட்டோ வேகமாக ஓடும்” த.மா.கா. துணைத்தலைவர் ஞானதேசிகன் பேட்டி
“சைக்கிளை விட ஆட்டோ வேகமாக ஓடும்” என்று த.மா.கா. துணைத்தலைவர் ஞானதேசிகன் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை ஆதரித்து இருசக்கர வாகன பிரசார பேரணி தஞ்சை ராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து தொடங்கி தஞ்சை நகர் முழுவதும் வலம் வந்தது.
இந்த பேரணியை த.மா.கா துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் தொடங்கி வைத்து பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நடைபெற உள்ள தேர்தல், ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்ற முயற்சிக்கும் தேர்தல் என்று கூறி உள்ளார். யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை சர்வாதிகாரமாக்க முடியாது. இந்த தேர்தல் மூலம் நிலையான ஆட்சி வேண்டுமா? குழப்பமான ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
இந்தியாவில் குழப்பமான ஆட்சி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக 2 கூட்டணிகள் சேர்ந்துள்ளன. ஆனால் அவர்களால் நிலையான ஆட்சியை தர முடியாது. பிரதமர் மோடியால் தான் நிலையான ஆட்சியை தர முடியும்.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. ஸ்டாலின் தனிநபர் விமர்சனம் செய்கிறார். அது தவறு. ஜூன் 3-ந்தேதி ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். இந்த ஆட்சி மாறப்போவது இல்லை. இது 2021 வரை தொடரும். அதன் பிறகு தான் சட்டசபை தேர்தல் வரும்.
நாங்கள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இடம் பெற்றுள்ளோம். அதில் தான் பா.ஜ.க. இடம் பெற்றுள்ளது. எங்கள் கூட்டணியை சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டணி போல சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். இது தவறான கருத்து. அ.தி.மு.க. அரசு சிறுபான்மை மக்களுக்கு எராளமான சலுகைகளை செய்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான அணி என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
நாங்கள் லட்சியம், கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் கூட்டணி அமைத்துள்ளோம். த.மா.கா.வுக்கு, ஆட்டோ சின்னம் புதிதாக வழங்கப்பட்டுள்ளது என கேட்கிறீர்கள். அண்ணாமலை சைக்கிளை விட பாட்ஷாவின் ஆட்டோ வேகமாக ஓடும். சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான தீர்ப்பில் மேல்முறையீடு செய்யமாட்டோம் என்று தமிழக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். இது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில துணைத்தலைவர் கோவை.தங்கம், பொதுச்செயலளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், பி.எல்ஏ.சிதம்பரம், தர்மராஜ், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாநகர தலைவர் ராஜேவேலு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story