மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Marxist Communist Party Demonstration in Pudukottai Government Hospital

புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் தங்கி உள்ளவர்களை பார்ப்பதற்கு இரவு நேரங்களில் வெளி ஆட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் தங்கி உள்ளவர்களை பார்ப்பதற்கு இரவு நேரங்களில் வெளி ஆட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. இந்தநிலையில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தான் வாங்கி வந்திருந்த உணவை உள்நோயாளிக்கு கொடுக்க வேண்டுமென அங்கிருந்த பாதுகாப்பு பணியாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததோடு, ஸ்ரீதரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், இரவில் 8 மணியில் இருந்து 9 மணி வரை பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பார்வையாளர் நேரத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அதிகாரிகள், போலீசார் உறுதி அளித்ததைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. அமலாக்கத்துறையை கண்டித்து மாநிலம் முழுவதும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையை கண்டித்து தானேயில் நேற்று நவ்பாடா, மும்ரா, வாக்ளே எஸ்டேட் ஆகிய இடங்களில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது
அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது தா.பழூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்.
3. சிகிச்சைக்காக சென்ற சிறுமி ஆஸ்பத்திரியில் பாலியல் பலாத்காரம்
உத்தரபிரதேச மாநிலத்தில், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி சென்ற சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
4. ராசிபுரத்தில் கனமழை, ஆஸ்பத்திரி, வீடுகளில் தண்ணீர் புகுந்தது
ராசிபுரத்தில் கனமழை காரணமாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்தது.
5. ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு
ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. அத்துடன் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.