காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு


காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 13 April 2019 4:00 AM IST (Updated: 13 April 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம் வாக்கு சேகரித்தார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வம், செங்கல்பட்டு தொகுதிக்கு உள்பட்ட வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், நெடுங்குன்றம், ஊனைமாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரித்தார். அப்போது எம்.எல்.ஏ. மற்றும் வேட்பாளருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பூக்களை தூவி, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.கே. தண்டபாணி, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி பொறுப்பாளர் ஜி.கே.லோகநாதன், மறைமலைநகர் நகர செயலாளர் சண்முகம், ஆப்பூர் சந்தானம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

Next Story