மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 April 2019 4:15 AM IST (Updated: 13 April 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 27). இவர் கடந்த 2014-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார், மருதுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் உறுதியானதால் மருதுபாண்டிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பு அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, மருதுபாண்டி ஒரு மாதத்திற்குள் ரூ.1 லட்சம் தொகையை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசின் துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story