நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 April 2019 10:00 PM GMT (Updated: 12 April 2019 8:15 PM GMT)

நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல், 

மத்திய அரசு விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாய ஓய்வை திணிக்க முயற்சிப்பதாக கூறி நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் சங்கத்தின் வட்ட தலைவர் ராஜகோபால், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் வட்ட தலைவர் சவுந்திரராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ராமசாமி, துணை செயலாளர் துரைசாமி, ஓய்வூதியர்கள் சங்க செயலாளர் கோபால் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விருப்ப ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நஷ்டத்திற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர். முடிவில் அகில இந்திய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

Next Story