மாவட்ட செய்திகள்

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை + "||" + Because they condemned playing on cellphone College student suicide

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை
செல்போனில் விளையாடியதை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்ததால், மனமுடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேவகோட்டை,

தேவகோட்டை அழகாபுரி தெற்கு தெருவில் வசிப்பவர் சுந்தரவேல். இவருடைய மகன் ஜனகன் (வயது 18) இவர் காரைக்குடியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தாராம். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர்.

அதில் மனமுடைந்த மாணவர் ஜனகன் இரவு மாடியில் தூங்க சென்றார். பின்பு மறுநாள் காலை வெகுநேரமாகியும், அவர் கீழே இறங்கி வராததால், வீட்டில் இருந்தவர்கள் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கிருந்த அறையில் ஜனகன் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை
ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
2. பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்
பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
3. வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
4. ராக்கிங்கை தடுக்க கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு - கலெக்டர் உத்தரவு
கல்லூரிகளில் ராக்கிங் நடக்காமல் தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
5. 2 மகள்களுடன், தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பெங்களூருவில், கள்ளத்தொடர்பை கைவிட கணவர் மறுத்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை