16-ந் தேதி தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்: தேரோடும் வீதிகளில் சீரமைப்பு பணி
தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேரோடும் வீதிகளில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்,
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைப்பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 5.15 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள்.
அங்கு தியாகராஜர்-கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி என நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வரும். தேர் வலம் வரக்கூடிய 4 வீதிகளிலும் குண்டும், குழியுமாக காணப்படும் இடங்களில் சாலை சீரமைப்பு பணி நேற்று நடைபெற்றது. தேர் எந்த வித சிரமமும் இன்றி எளிதாக செல்லும் வகையில் பள்ளமாக காணப்படும் இடங்களும் மூடப்பட்டன.தேர் அலங்கார பணி நடைபெற்று வருகிறது. அதோடு தேரில் படிந்துள்ள தூசிகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதேபோல தேர் செல்லக்கூடிய 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மரக்கிளைகளை வெட்டவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவில் அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைப்பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 5.15 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள்.
அங்கு தியாகராஜர்-கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி என நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வரும். தேர் வலம் வரக்கூடிய 4 வீதிகளிலும் குண்டும், குழியுமாக காணப்படும் இடங்களில் சாலை சீரமைப்பு பணி நேற்று நடைபெற்றது. தேர் எந்த வித சிரமமும் இன்றி எளிதாக செல்லும் வகையில் பள்ளமாக காணப்படும் இடங்களும் மூடப்பட்டன.தேர் அலங்கார பணி நடைபெற்று வருகிறது. அதோடு தேரில் படிந்துள்ள தூசிகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதேபோல தேர் செல்லக்கூடிய 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மரக்கிளைகளை வெட்டவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Related Tags :
Next Story