நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை நண்பருடன் காதலன் கைது


நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை நண்பருடன் காதலன் கைது
x
தினத்தந்தி 15 April 2019 4:15 AM IST (Updated: 14 April 2019 10:09 PM IST)
t-max-icont-min-icon

நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது நண்பருடன், காதலன் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பள்ளியில் படிக்கும்போது இவரை, பள்ளிக் கரணை நாராயணபுரத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (20) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

தற்போது ஸ்ரீநாத், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீநாத், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு மறைந்து இருந்த ஸ்ரீநாத்துடன் அதே கல்லூரியில் படிக்கும் அவரது நண்பரான வேளச்சேரியை சேர்ந்த யோகேஷ்(19) என்பவர் இதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார்.

பின்னர் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங் களை காட்டி, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, கல்லூரி மாணவிக்கு ஸ்ரீநாத் தனது நண்பர் யோகேசுடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் பயந்துபோன மாணவி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரியிடம் புகார் செய்தனர்.

அவரது உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து என்ஜினீயரிங் மாணவியை மிரட்டியதாக, கல்லூரி மாணவர்களான ஸ்ரீநாத், அவருடைய நண்பர் யோகேஷ் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story