மாவட்ட செய்திகள்

தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின் சரத்குமார் பேட்டி + "||" + MK Stalin's Sarath Kumar interviewed him after the election

தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின் சரத்குமார் பேட்டி

தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின் சரத்குமார் பேட்டி
தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என மு.க.ஸ்டாலின் கனவு காண்பதாக சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
கன்னியாகுமரி,

அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட தயாராகி விட்டார்கள். இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பல கட்சிகளுக்கு பல கருத்துகள் இருந்தாலும் மத்தியில் நிலையான பெரும்பான்மை பலமுள்ள ஆட்சி மோடி தலைமையில் வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மக்கள் உள்ளனர். மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.


மோடி தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பல திட்டங்களை நிறைவேற்றினார்.

கன்னியாகுமரி தொகுதியில் 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பாக பணியாற்றினார். இந்த தொகுதி நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. நல்ல அரசியல்வாதியான இவர் மீண்டும் வெற்றி பெற வேண்டும். வருமான வரிசோதனை எதிர்க்கட்சிகளை குறி வைத்து நடப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. இதில் சூழ்ச்சி, சதி எதுவும் கிடையாது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அவர்கள் சோதனை நடத்துகிறார்கள். முன்பு என்னிடமும் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும், நாம் முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரால் எந்த காலத்திலும் தமிழக முதல்-அமைச்சராக வர முடியாது. அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் ஸ்டாலினிடம் உள்ளது. அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் எப்படி ஆட்சிக்கு வரமுடியும். சட்டசபை இடைத்தேர்தலிலும் எங்கள் ஆதரவு அ.தி.மு.க. கூட்டணிக்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா பேட்டி
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியமாக உள்ளது என்று காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா கூறினார்.
2. சுயநலத்துக்காக கட்சியை விட்டு பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாது தஞ்சையில், டி.டி.வி.தினகரன் பேட்டி
சுயநலத்துக்காக கட்சியை விட்டு பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாது என்று தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
3. மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் தஞ்சையில், முத்தரசன் பேட்டி
மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று, தஞ்சையில் முத்தரசன் கூறினார்.
4. இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
5. தமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது தஞ்சையில், எச்.ராஜா பேட்டி
தமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.