மாவட்ட செய்திகள்

ராமநத்தம் அருகே, விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை கொள்ளை + "||" + Near Ramanatham, Rs.3¼ lakh jewelery robbery at the farmer house

ராமநத்தம் அருகே, விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை கொள்ளை

ராமநத்தம் அருகே, விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை கொள்ளை
ராமநத்தம் அருகே விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள தொழுதூர் தச்சூர் சாலையை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 49). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார். நேற்று காலை எழுந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறந்து அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 16 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

மாணிக்கம் குடும்பத்தினர் கதவை திறந்து வைத்துவிட்டு, வெளியே தூங்குவதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரப்பாக்கம் அருகே, காண்டிராக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
ஊரப்பாக்கம் அருகே காண்டிராக்டர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
2. இறைச்சி கடைக்காரரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன் நகை கொள்ளை
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து இறைச்சி கடைக்காரரிடம் 10 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
3. இறைச்சி கடைக்காரரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன் நகை கொள்ளை
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து இறைச்சி கடைக்காரரிடம் 10 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
4. பா.ஜனதா பிரமுகர் வீட்டில் 385 பவுன் நகை கொள்ளை - ஜவுளி எடுக்க சென்னை வந்தபோது கைவரிசை
மீஞ்சூர் அருகே பா.ஜனதா நிர்வாகி வீட்டின் பூட்டை உடைத்து 385 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. மீஞ்சூர் அருகே, பா.ஜனதா பிரமுகர் வீட்டில் 385 பவுன் நகை கொள்ளை - ஜவுளி எடுக்க சென்னை வந்தபோது கைவரிசை
மீஞ்சூர் அருகே பா.ஜனதா நிர்வாகி வீட்டின் பூட்டை உடைத்து 385 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.