கோவில்பட்டி, காயல்பட்டினத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு


கோவில்பட்டி, காயல்பட்டினத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 15 April 2019 9:30 PM GMT (Updated: 15 April 2019 7:53 PM GMT)

கோவில்பட்டி, காயல்பட்டினத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கோவில்பட்டி, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு, தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு போலீசார் மற்றும் அதிரடி படையினர் துப்பாக்கி ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி புது ரோடு, மெயின் ரோடு, ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு, கதிரேசன் கோவில் ரோடு, பார்க் ரோடு வழியாக சென்று, மீண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன் (கோவில்பட்டி கிழக்கு), அய்யப்பன் (மேற்கு), ஆவுடையப்பன் (கயத்தாறு), பத்மாவதி (கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதேபோன்று காயல்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமை தாங்கினார். போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர்.

காயல்பட்டினம் மெயின் பஜார், வள்ளல் சீதக்காதி திடல், பெரிய நெசவு தெரு, உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெரு வழியாக சென்று, மீண்டும் புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தனர். தேர்தலில் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று போலீசார் ஒலிப்பெருக்கியில் அறிவுறுத்தியவாறு சென்றனர்.

Next Story