மாவட்ட செய்திகள்

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு + "||" + Devotees participate in Swami-Ambal at Tirupinjali Nalinvaswara temple

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சுவாமி கேடயத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்று முதல் தினமும் காலை பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், கிளி, யானை, அன்னம், பூத வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.


திருவிழாவின் 6-ம் நாளான நேற்று சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் தேங்காய், பழம், பூ மாலைகள் போன்ற பொருட்களை எடுத்து வந்திருந்தனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் சொல்லி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர்.

தேரோட்டம்

இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு கைலாச வாகனம், அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடாகிறார். நாளை(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி தங்க குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேே-்ராட்டம் 18-ந் தேதி(வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.

19-ந் தேதி காலை 7 மணிக்கு தேர்கால் பார்த்தலும், நடராஜர் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு கேடயத்தில் சுவாமி புறப்பாடாகிறார். 20-ந் தேதி இரவு முத்து பல்லக்கும், 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பஞ்சபிரகார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல்அலுவலர் ஹேமலதா மற்றும் ஊழியர்கள், பக்த பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
2. வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி வழிபட்டார்.
3. கும்பகோணம் ராமசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்
கும்பகோணம் ராமசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
4. திருப்பதி கோவிலில் தங்க கிரீடங்களை கொள்ளையடித்த ஆசாமி கைது
திருப்பதி கோவிலில் தங்க கிரீடங்களை கொள்ளையடித்த ஆசாமி மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
5. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.