மாவட்ட செய்திகள்

தேவகோட்டை –காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்பு + "||" + at Devakottai - karikukudi Police flag parade

தேவகோட்டை –காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்பு

தேவகோட்டை –காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்பு
தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி தேவகோட்டை மற்றும் காரைக்குடி பகுதியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவகோட்டை,

மாவட்ட போலீஸ்துறை சார்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுளது. இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் தேவகோட்டை மற்றும் காரைக்குடி பகுதியில் நடைபெற்றது.

தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியில் இருந்து ராம்நகர் ஆனந்தா கல்லூரி வரை போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்திற்கு தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். ஊர்வலம் தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. ஊர்வலத்தில் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர், காவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அருண், அண்ணாத்துரை ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து புதிய பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது.

சிங்கம்புணரி பஸ்நிலையத்தில் நடைபெற்ற ஊர்வலத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவரது தலைமையில், பட்டாலியன் படைகளைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் சிங்கம்புணரி, எஸ்.வி மங்கலம், கண்டவராயன்பட்டி, நெற்குப்பை, எஸ்.புதூர், உலகம்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை, புழுதிபட்டி, திருப்பத்தூர், நாச்சியார்புரம் உள்ளிட்ட 13 சரகங்களில் இருந்து காவலர்கள் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டனர்

இதேபோல இளையான்குடியில் போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல்கபூர் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வழியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க உதவியாக காவல்துறை இருப்பதை உறுதி செய்தும், சாலையூர் புறவழிச்சாலையில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியே வந்து இளையான்குடி கண்மாய்க்கரையில் ஊர்வலம் முடிவடைந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் பழனிமுத்து, வசந்தி உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.