வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக புகார் அ.தி.மு.க. நிர்வாகியிடம் ரூ.51 ஆயிரம் பறிமுதல்


வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக புகார் அ.தி.மு.க. நிர்வாகியிடம் ரூ.51 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 April 2019 3:30 AM IST (Updated: 17 April 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

சின்ன காஞ்சீபுரம் சுண்ணாம்புக்கார தெருவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகத்திற்கு தகவல் கிடைத்தது.

காஞ்சீபுரம்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று சின்ன காஞ்சீபுரம் சுண்ணாம்புக்கார தெருவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகத்திற்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அந்த பகுதிக்கு விரைந்து சென்றார்.

அப்போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக அ.தி.மு.க. நிர்வாகியான சின்ன காஞ்சீபுரம் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த நேசமணி (வயது 55) என்பவரிடம் இருந்து ரூ.51 ஆயிரத்து 200-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story