மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு சென்ற போது ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 கோடியே 41 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை + "||" + In the absence of documents, Rs. 1 crore 41 lakhs were confiscated

ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு சென்ற போது ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 கோடியே 41 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு சென்ற போது ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 கோடியே 41 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு சென்ற போது ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 கோடியே 41 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சூலூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. நேற்று மாலை முதல் தலைவர்கள் பிரசாரம் நிறைவடைந்து விட்டதால், இன்று (புதன்கிழமை) வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்து மேல் பணம், நகைகள், துணிமணிகள், ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு சென்றால் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூலூர்- திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் நேற்று திருப்பூர் மாவட்ட ஜி.எஸ்.டி. இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக கோவை நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 41 லட்சம் இருந்தது.

இதை தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்ப பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லை. இதனால் ரூ.1 கோடியே 41 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பணம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பணம் சூலூர் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் மு.க ஸ்டாலின் தங்க உள்ள தனியார் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் அரசியல் கட்சியினர் தங்கியுள்ள தனியார் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. அசாமில் வாகன சோதனையில் மிரட்டி பணம் பறிப்பு; தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த 2 பேர் கைது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அசாமில் வாகன சோதனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. ஊட்டியில் வாகன சோதனை,புதிய இருசக்கர வாகனங்கள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
ஊட்டியில் நடந்த வாகன சோதனையில் புதிய இருசக்கர வாகனங்கள், அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
4. பீட் மாவட்டத்தில் காரில் ரூ.1½ கோடி பறிமுதல் : தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
மராட்டியத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற சம்பவங்களை தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.