வானவில் : மோட்டார் சூட்கேஸ்


வானவில்  : மோட்டார் சூட்கேஸ்
x
தினத்தந்தி 17 April 2019 2:37 PM IST (Updated: 17 April 2019 2:37 PM IST)
t-max-icont-min-icon

சில தொழில்நுட்பங்கள் உடல் உழைப்பை விரும்பாதவர்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன.அந்த வகையை சேர்ந்தது தான் இந்த மோடோ பேக்.

பார்ப்பதற்கு சாதாரண பெட்டியை போன்று தோற்றமளிக்கும் இது சுமார் 118 கிலோ எடையுள்ள நபரை சுமந்து செல்லும். பெட்டியின் உள்ளே இருக்கும் பொருட்களுக்கோ, பெட்டிக்கோ எந்த சேதாரமும் ஏற்படாது. விமான நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலைகளிலோ, வெகு தூரம் பெட்டியைத் தூக்கி கொண்டு நடக்க நேரிடும் போதோ இது நிச்சயம் கை கொடுக்கும். இதன் மேல் உட்கார்ந்து கொண்டு பைக் ஓட்டுவது போல ஸ்டிரிங்கை திருகினால் நகர்ந்து செல்கிறது.

விமானத்தில் இருக்கும் பெட்டி வைக்கும் இடத்தில் இது கச்சிதமாக பொருந்தும். எந்த வகையான தரையிலும் நகர்ந்து செல்லும் வகையில் இதன் சக்கரங்கள் உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளன. இது பேட்டரியில் இயங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தல் எட்டு மணி நேரம் வரை இதனை உபயோகிக்கலாம். நடந்து செல்வதை விட மூன்று மடங்கு அதிகமான வேகத்தில் நமக்கு வேண்டிய இடத்தை சென்று சேர முடியும். இதை ஓட்டிச் செல்ல விரும்பாதவர்கள் சாதாரண பெட்டியைப் போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உலகின் முதல் மோட்டார் சூட்கேஸ் என்று இதனை அழைக்கின்றனர். இதன் விலை சுமார் ரூ.1.02 லட்சம்.

Next Story