வானவில் : யு.எஸ்.பி. பிரேஸ்லெட்
இது மின்னணு யுகம். அனைத்து தகவல்களும் விரல் நுனியில் உங்கள் ஸ்மார்ட்போனில். கூடுதல் தகவலை சேகரிக்க டேட்டா கேபிள். அதுவும் அழகிய பிரேஸ்லெட் போன்று வந்துள்ளது.
மூன்று வித செயல்பாடுகளைக் கொண்டது. இதன் மூலம் சார்ஜ் செய்ய பயன்படுத்தலாம். டிரான்ஸ்மிஷன் தகவல் கடத்தும் கேபிளாக உபயோகிக்கலாம். அடுத்து அழகிய பிரேஸ்லெட்டாக கைகளில் அணிந்து செல்லலாம். எடுத்துச் செல்வது எளிது. மறந்து போகாது. தகவல்களை சேமித்து வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
அழகிய வடிவமைப்பு, அணிவதற்கு ஏற்ற தோற்றம், கைகளில் மிக கச்சிதமாக எளிதில் விழாத வகையில் பிடித்துக் கொள்வது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிக உயர்ந்த தோலினால் ஆனது. இதனால் கைகளுக்கு எவ்வித அரிப்பு ஏற்படாது. இதன் விலை ரூ.1,020.
Related Tags :
Next Story