ஒரே நேரத்தில் சூரியன் மறைவு–சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி கன்னியாகுமரியில் நாளை பார்க்கலாம்


ஒரே நேரத்தில் சூரியன் மறைவு–சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி கன்னியாகுமரியில் நாளை பார்க்கலாம்
x
தினத்தந்தி 18 April 2019 4:15 AM IST (Updated: 18 April 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

சித்ரா பவுர்ணமியான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி நிலவுகிறது.

கன்னியாகுமரி,

சித்ரா பவுர்ணமியான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி நிலவுகிறது. ஒரே நேரத்தில் நிகழும் இந்த காட்சி கன்னியாகுமரியிலும், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டும் தான் காண முடியும்.

கன்னியாகுமரியில் சூரியன் பந்து போன்ற வடிவத்தில் மூழ்குவது போல் இருக்கும். அதே சமயம் கிழக்கு பக்கத்தில் நெருப்பு பந்து போல் எழும்பும். அப்போது கடலின் மேல் பகுதியில் உள்ள வானம் வெளிச்சத்தில் மின்னும். இந்த காட்சியை பார்க்க அனைவரும் கூடுவார்கள்.


Next Story