திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 77.49 சதவீத வாக்குகள் பதிவு 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம்


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 77.49 சதவீத வாக்குகள் பதிவு 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம்
x
தினத்தந்தி 20 April 2019 4:15 AM IST (Updated: 19 April 2019 8:17 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 77.49 சதவீத வாக்குகள் பதிவானது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தொகுதியில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 136 ஆண்கள், 7 லட்சத்து 42 ஆயிரத்து 990 பெண்கள், 77 மூன்றாம் பாலினத்தவர்கள் என 14 லட்சத்து 70 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 295 ஆண்கள், 5 லட்சத்து 75 ஆயிரத்து 978 பெண்கள் 27 மூன்றாம் பாலினத்தவர்கள் என 11 லட்சத்து 39 ஆயிரத்து 300 வாக்காளர்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இது 77.49 சதவீதமாகும்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் கொண்டதாகும்.

சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:–

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 837 ஆண்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 381 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என 23 லட்சத்து 223 வாக்காளர்கள் உள்னனர். இதில் 87 ஆயிரத்து 650 ஆண்கள், 92 ஆயிரத்து 727 பெண்கள் 1 மூன்றாம் பாலினத்தவர் என 1 லட்சத்து 80 ஆயிரத்து 378 வாக்காளர்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இது 78.35 சதவீதம் ஆகும்.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 56 ஆண்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 494 பெண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 28 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 87 ஆயிரத்து 374 ஆண்கள், 87 ஆயிரத்து 205 பெண்கள் என 1 லட்சத்து 74 ஆயிரத்து 579 வாக்காளர்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இது 76.38 சதவீதம் ஆகும்.

செங்கம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 830 ஆண்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 905 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 62 ஆயிரத்து 739 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 208 ஆண்கள், 1 லட்சத்து 4 ஆயிரத்து 814 பெண்கள், 1 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 9 ஆயிரத்து 23 வாக்காளர்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இது 79.56 சதவீதம் ஆகும்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 117 ஆண்கள், 1 லட்சத்து 41 ஆயிரத்து 54 பெண்கள், 37 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 74 ஆயிரத்து 208 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 95 ஆயிரத்து 805 ஆண்கள், 1 லட்சத்து 344 பெண்கள் 18 மூன்றாம் பாலினத்தவர்கள் என 1 லட்சத்து 96 ஆயிரத்து 167 வாக்காளர்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இது 71.54 சதவீதம் ஆகும்.

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 297 ஆண்கள், 1 லட்சத்து 23 ஆயிரத்து 661 பெண்கள் 9 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 43 ஆயிரத்து 967 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 96 ஆயிரத்து 232 ஆண்கள், 98 ஆயிரத்து 584 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என 1 லட்சத்து 94 ஆயிரத்து 818 வாக்காளர்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இது 79.97 சதவீதம் ஆகும்.

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 999 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 495 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 30 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 92 ஆயிரத்து 26 ஆண்கள், 92 ஆயிரத்து 304 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என 1 லட்சத்து 84 ஆயிரத்து 335 வாக்காளர்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இது 79.97 சதவீதம் ஆகும்.


Next Story